தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் கரையடி சுவாமி திருக்கோவில் எதிரே உள்ள காட்டு பகுதியில் அடையாளம் தெரியாத நிலையில் இறந்து 10 நாட்களுக்கு மேல் ஆன பேண்ட், சட்டை அணிந்து இருந்த நபரின் உடல் அழுகிய நிலையில் கிடந்ததாக சாத்தான்குளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் ஏசு ராஜசேகரன் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.