இன்டர்வியூ நடத்துவதாக இளம்பெண் ணை அழைத்து பாலியல் வல்லுறவு – ராணுவ வீரருக்கு வலை

0
893



கோவை சுந்தராபுரம் எல்ஐசி ஏஜென்ட் காலனி பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் .இவரது மனைவி மாலினி (26).
இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். மோகன்ராஜ் சிஎன்சி ஆப்பரேட்டர் பணிபுரிந்து வருகிறார். மாலினி தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் வேலை தேடி வந்தார் .அப்போது மாலினியின் உறவினர் இராணுவ வீரரான தேனி மாவட்டம் போடியை சேர்ந்த சரவணன் என்பவர் மாலினியிடம் தனக்கு தெரிந்த நிறுவனத்தில் வேலை ஏற்பாடு செய்வதாக கூறியிருக்கிறார். இதை அடுத்து மாலினி அதற்குரிய விண்ணப்பத்தை சரவணன் மூலம் அளித்துள்ளார் .தொடர்ந்து சரவணன் கடந்த வாரம் மாலினியிடம் இன்டர்வியூக்கு அழைப்பார்கள். அந்த சமயத்தில் சென்று இண்டர்வியூவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

மாலினியை கடந்த சில நாட்களுக்கு முன்பு சுந்தராபுரம் பகுதியில் உள்ள அபீஸ் கிராண்ட் என்ற ஹோட்டலில் வேலை சம்பந்தமாக இன்டர்வியூக்கு முன்பு ஆலோசனை நடத்த வேண்டும் என்று கூறி சரவணன் அழைத்துள்ளார். இதை நம்பி மாலினி அந்த ஹோட்டலுக்கு சென்றார் .அப்போது சரவணன் கட்டாயப்படுத்தி மாலினியை கற்பழித்துள்ளார். மேலும் இது குறித்து வெளியில் கூறினால் கொலை செய்வதாக சரவணன் மாலினி மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன ஷாலினி கடந்த சில நாட்களாக யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்தார். மேலும் மாலினி அழுதுகொண்டே இருந்ததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தார் என்ன விஷயம் என்று கேட்டுள்ளனர்.

அப்போது இதுகுறித்து தனது குடும்பத்தாரிடம் தெரிவித்தார். தொடர்ந்து நேற்று இதுகுறித்து போத்தனூர் போலீசில் மாலினி புகார் அளித்தார் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வேலைக்கு இன்டர்வியூ என்றழைத்து இளம்பெண்ணை கற்பழித்த இராணுவ வீரர் சரவணன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இன்டர்வியூ என்ற பெயரில் அழைத்து இளம்பெண்ணை இராணுவ வீரர் கற்பழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here