நெல்லை மாவட்டம் திசையன்விளை டிஎம்பி வங்கி அருகே 27 வயது வாலிபர் சிறிது நேரத்துக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில் அவர் நவ்வலடியை சேர்ந்த முருகன், பெயிண்டர் என்று தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்டவர் அருகே ரத்தக்கறையுடன் கிடந்த லிவர் கைப்பற்றப்பட்டுள்ளது. அதன் மூலமாகவே அடித்துக்கொன்றிருக்கலாம் என கருதப்படுகிறது. அவருடன் அவரது நண்பரான முருகானந்தம் என்பவர் மது அருந்திவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவரே இந்த கொலையை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கொலை நடந்த இடத்துக்கு எஸ்பி மணிவண்ணன் விரைந்துள்ளார்.








