சொந்த செலவில் அவசர ஆக்சிஜன் ஊர்தி இயக்கும் போக்குவரத்து ஊழியர்

0
689

மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த அரசுப்பேருந்து ஓட்டுநர் ரெங்கநாதன் காரைக்குடி மண்டலம், கமுதி கிளையில் 2001 asம் ஆண்டு முதல் தினக்கூலி ஓட்டுநராக 6 ஆண்டுகளாகவும், நிரந்தர பணியாளராக 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். மேலும் 20வருடங்களாக விபத்து ஏதும் ஏற்படுத்தாத ஓட்டுநராகவும் உள்ளார்.

இந்நிலையில் தனது குடும்பத்திற்காவும், வருங்கால தேவைக்களுக்காகவும் சேர்த்து வைத்திருந்த ஒரு லட்ச ரூபாய் பணம் மற்றும் நகைகளை விற்று ஆக்ஸிஜன் வசதி கொண்டு அவசர ஊர்தி சேவையை ரங்கநாதன் தொடங்கியுள்ளார்.

இதற்கு காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரவிசங்கர் என்ற அரசு பேருந்து ஊழியர் நோய்வாய்ப்பட்டு இறந்தார். அவருடைய பிரேதத்தை கொண்டு செல்லக்கூட பணம் இல்லாமல் கடைசியில் மாட்டுத்தாவணியில் ஒரு சிலரிடம் காசு வாங்கி எடுத்துச்சென்றோம். அதுபோன்ற நிலை மற்ற தொழிலாளர்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது. அந்தச்சம்பவத்தின் எதிரொலியாக தான் எனது பத்து வருட சேமிப்பை கொண்டு இந்த இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கியிருப்பதாகவும், மேலும் நோய்வாய்ப்பட்ட தொழிலாளர் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் வெறும் ஆம்புலன்ஸ் மட்டும் இல்லாமல் ஆக்ஸினன் வசதயும் ஏற்டுத்தி உள்ளேன்.

முழுக்க முழுக்க நலிவுற்ற அரசுப்போக்குவரத்து தொழிலாளர்களுக்காக இதை செய்துள்ளேன்.

மருத்துவர்கள் காவல்துறையினர் இறந்தால் 25 லட்சத்தை முதல்வர் கொடுக்கிறார். அதே போல அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் பணிக்காலத்தில் இறந்தால் 25 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் எனவும், ஓய்வூதியதாரர்களின் பபணப்பயன்கள், வாரிசுகளுக்கு வேலை உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதல்வருக்கு அரசு பேருந்து ஓட்டுநர் ரெங்கநாதன் கோரிக்கை விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here