தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் பகுதியில் இன்று அன்னையர் முன்னணி சார்பில் மழை பெய்ய வேண்டிய சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு மஞ்சள் நீர் அபிஷேகம் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.