நெல்லையில் திமுக மாவட்ட அலுவலகத்திலும் மாவட்ட செயலாளரான முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் வீட்டிலும் ரெய்டு நடத்தி இலட்சக்கணக்கான பணத்தை கைப்பற்றியது தொடர்பாக புதிய தகவல் கசிந்துள்ளது.
இன்று மாவட்ட அலுவலகத்தில் நடந்த கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பண விநியோகம் நடக்கப்போவதை வாடை பிடித்த வருமான வரித்துறை அதிகாரிகள், அதை உறுதிப்படுத்த தங்கள் அலுவலர்களை, கட்சி போல கூட்டத்தோடு கூட்டமாக கலக்க விட்டனர்.
கூட்டத்தில் இருந்து கொண்டே நோட்டமிட்ட அலுவலர்கள், பணம் இருந்ததை உறுதிப்படுத்தியது, மெதுவாக ஓரம் போய் சற்று தூரத்தில் வெளியே நின்ற அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர் .
இதையடுத்து அதிகாரிகள் கூட்டத்திற்குள் நுழைய, கட்சிக்காரர்கள் பணத்தை ஒரு பையில் கட்டி தமுமுக பொறுப்பாளர் ரசூல் மைதீன் காரில் சாதுரியமாக ஏறிய, வருமானவரித்துறை அதிகாரிகள் சுதாரித்து கொண்டு, காரோடு 28 லட்சம் பணத்தையும் மடக்கிச் சென்றுள்ளனர்.