தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் 26 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அதன்படி நெல்லை மாநகராட்சி ஆணையராக விஷ்ணு சந்திரனும் மதுரை மாநகராட்சி ஆணையராக கேபி கார்த்திகேயனும் சேலம் மாநகராட்சி ஆணையராக கிறிஸ்துராஜ் கோவை மாநகராட்சி ஆணையராக ராஜகோபால் கங்காராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.











