வாலிபர் கொலைக்கு உடந்தை தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் மீது கொலை வழக்கு

0
578

சாத்தான்குளம் அருகே சொக்கன்குடியிருப்பை சேர்ந்த தனிஸ்லாஸ் மகன் செல்வன் (32) என்பவரை சிலர் காரில் கடத்தி கொஅலி செய்த செய்தியை நேற்று முதன்முதலாக வெளியிட்டிருந்தோம். அதில், இந்த சம்பவத்தில் போலீசார் துரிதமாக செயல்பட்டிருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம். ஏற்கனவே போலீசார் நிலப்பிரச்சினையில் ஒரு சார்பாக செயல்பட்டனர் என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர் என்ற உண்மையை வெளிப்படுத்தியிருந்தோம்.
இந்த செய்தி பல காவல் அதிகாரிகள் வாட்ஸ் ஆப், முகநூல் பக்கங்களுக்கு சென்றது. ஏற்கனவே, பாதிக்கப்பட்ட செல்வனுக்கு எதிராக, அதிமுக பிரமுகர் திருமணவேலுக்கு ஆதரவாக இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் செயல்பட்டுள்ளார். செல்வன் மீது பொய் வழக்கு பதிந்தார். கொழுந்தட்டு அருகே செல்வனை பைக்கிலிருந்து வீழ்த்திய நிலையில், அப்பகுதி மக்கள் உடனேயே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனால், போலீசார் துரிதமாக செயல்படாமல் வேண்டுமென்றே தாமதம் செய்ததாக தெரிகிறது. எனவே, கொலைத்திட்டம் பற்றி முன்கூடியே தெரிந்து, அது நடக்க உதவி புரிந்ததாகவே இதை அதிகாரிகள் கருதினர். எனவே, அதிமுக பிரமுகர் திருமணவேல் மற்றும் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்த இன்ஸ்பெக்டர் ஏற்கனவே இப்பகுதியில் உள்ள செல்வந்தர்களுக்கு ஆதரவாக நிலத்தகராறுகளை ஒருதலை பட்சமாக தீர்த்துவந்தார் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here