மதுரை கருப்பட்டி பகுதியை சேர்ந்த ரகுராஜா மனைவி மகாராணி( 34).இவர் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார், முதல் அலையில் இருந்து கொரோனா வார்டில் பணிபுரிந்து வந்துள்ளார
இந்நிலையில் கடந்த 6 ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் 6 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த செவிலியர் மகாராணிக்கு சிகிச்சை பலனளிக்காத காரணத்தால் இன்று மாலை உயிரிழந்தார்,
கடந்த 2011ம் ஆண்டு முதல் செவிலியரான மகாராணி, திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் 8 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக பணிபுரிந்து வந்துள்ளார், மேலும் அரசு கொரோனா மருத்துவமனையில் 6 வாரங்களுக்கும் மேல் பணி செய்துள்ளார்,
செவிலியர் மகாராணியின் பிரிவால் அரசு இராஜாஜி மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் வருத்தமடைந்துள்ளனர்,
மேலும் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றிய தூய்மைப் பணியாளர் மரிய ராணி என்பவர் கடந்த 30 ஆம் தேதி உயிரிழந்த நிலையில் மருத்துவமனையில் அடுத்தடுத்து ஊழியர்கள் உயிரிழக்கும் சம்பவம் சக ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,












