தூத்துக்குடி புதுக்கிராமத்தை சேர்ந்தவர் ரோகித் இவருடைய மகள் ரியானா சம்தா (2). சென்னையில் வேலை பார்த்து வரும் ரோகித் கடந்த வாரம் தூத்துக்குடியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார்.
நேற்று குழந்தை ரியானா வீட்டில் விளையாடிக் கொண்டு இருந்தது. சிறிது நேரம் கழித்து குழந்தையை காணாததால் வீட்டில் இருந்தவர்கள் தேடிப்பார்த்தனர். நீண்ட நேரமாக அக்கம்பக்கத்தில் தேடிப் பார்த்தும் குழந்தையை பற்றிய விவரம் தெரியாமல் தவித்தனர்.
அப்போது, வீட்டில் நின்ற காருக்குள் குழந்தை ரியானா மயங்கிய நிலையில் கிடக்க அதனை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து கார் கதவை திறந்து குழந்தையை மீட்டனர்.
பின்னர் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் ரியானாவை சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக் காக குழந்தையை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தை பரிதாபமாக இறந்தது.
து குறித்து தகவல் அறிந்த தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போது குழந்தை விளையாடிய போது, கார் கதவு திறந்து கிடந்ததும் காருக்குள் ஏறிய குழந்தை கதவை மூட பிறகு கதவை திறக்க தெரியாததால் காருக்குள் சிக்கி குழந்தை மூச்சுத் திணறி இறந்தது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





