கோவை ரத்தினபுரி சுப்பம்மாள் நகர் பகுதியைச் சேர்ந்த கைலாசம் என்பவரின் மகன் சுதாகர் (41). கூலி வேலை செய்துவரும் இவரது மகள் ஹரிணி(16) ராம் நகர் பகுதியில் உள்ள சபர்பன் மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக ஆன்லைன் மூலம் வகுப்புகளில் பங்கேற்பதற்காக சுதாகர் தனது மகள் ஹரிணிக்கு ஆண்ட்ராய்டு செல்போன் ஒன்றை வாங்கிக் கொடுத்தார். ஆனால் பள்ளி பாடங்களை கவனிக்காமல் ஹரிணி செல்போனில் விளையாடிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதை அவரது தந்தை சுதாகர் கண்டித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த ஹரிணி நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த துடியலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














