நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் விவரம் நாளை அறிவிக்கப்படும் என துணை முதல்வர் பன்னிர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. ‘தொடர்ச்சியாக உழைப்பவர்களை தேர்தல் பணியில் அமர்த்தவேண்டும்’ என இபிஎஸ், ஓபிஎஸ் தெரிவித்தனர். இறுதியில் இரு தொகுதிகளிலும் பணியாற்ற 20 மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.














