கடையநல்லூர் அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்றவர் கைது

0
1341

சொக்கம்பட்டி அருகே திரிகூடபுரத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபர் கைது.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் தாலுகா சொக்கம்பட்டி அருகே திரிகூடபுரம் கிராமத்தில் காந்தி காலனியில் குடியிருக்கும் கடையநல்லூரை சேர்ந்த முகம்மது கோதரி மகன் முகம்மது மீத்தின் வயது (53) இவர் கடையநல்லூர், சொக்கம்பட்டி,புளியங்குடி ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ்க்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சொக்கம்பட்டி சப் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையிலான போலீசார் அவரின் வீட்டில் சோதனை செய்ததில் அங்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர் ,

பின்பு வீட்டில் சட்டவிரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக முகம்மது மீத்தினை சிறையில் அடைத்தனர். இவர் மீது கஞ்சா விற்பனை செய்ததாக 8 வழக்குகள் உள்ளது . மேலும் இவரின் பெயர் ரவுடி பதிவேட்டில் இருப்பதாக போலீசார் கூறியுள்ளனர் .

இவர் கடையநல்லூர் பகுதியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்வதால் இவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here