சாத்தான்குளம் அருகே வாலிபர் விபத்தில் உயிரிழப்பு

0
1088

சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலம் கீழத்தெருவை சேர்ந்த கண்ணன் – ஜெபமணி தம்பதியரின் ஒரே மகனான முத்து (29) என்பவர் இன்று இரவு அம்பலசேரியில் இருந்து கட்டாரிமங்கலம் செல்லும் வழியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மின் கம்பத்தில் மோதியதில் அவர் உயிரிழந்தார்.

மேலும் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு கண்ணன் தனது மனைவியை பிரிந்து சென்று விட்ட நிலையில் தனது ஒரே மகனான முத்துவை, ஜெபமணி வளர்த்து வந்த சூழ்நிலையில் இச்சம்பவம் நடந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வருகின்றனர்.மேலும் சாலையோரம் நடப்படும் சோலார் மின் கம்பங்களால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஏற்கனவே குற்றம் சாட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here