திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்பி செளத்ரியிடம் படங்களை தயாரிக்க கடன்வாங்கியதாகவும், அதற்காக புரோநோட் எழுதிக்கொடுத்ததாகவும், பணம் கொடுத்து கணக்கை முடித்தும் புரோ நோட்டை அவர் திருப்பித்தர மறுப்பதாகவும், மிரட்டுவதாகவும் நடிகர் விஷால்சார்பில் அவரது உதவியாளர் ரவி சென்னை மாநகர போலீஸ் துணை காணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
இதேபோல், ஆம்பள படத் தயாரிப்பின்போதும் செளத்ரி நடந்துகொண்டதாகவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.