கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் பேரூர் உட்கோட்ட காவல் துணைக் காவல் கண்காணிப்பாளர் சீனிவாசலு மேற்பார்வையில் தொண்டாமுத்தூர் வட்ட ஆய்வாளர் பொறுப்பு சாஸ்தா தலைமையில் உதவி ஆய்வாளர்கள் சேகர், ரத்திஸ் மற்றும் தலைமைக் காவலர் ரஞ்சித்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் வடவள்ளி பகுதியில் பல்வேறு கொள்ளை மற்றும் திருட்டு வழக்கில் தொடர்புடைய மதுரையைச் சேர்ந்த பாஸ்கர் (எ) கமலக்கண்ணன் (எ) பக்தவச்சலம் என்ற நபரை வடவள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்வீராம்பாளையத்தில் வைத்து கைது செய்தனர்.
விசாரணையில் இந்நபர் திருச்சி,மதுரை ,திண்டுக்கல், சென்னை ஆகிய பகுதிகளில் 30 க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளிலும் தொடர்புடையவர் என தெரிய வந்துள்ளது. மேலும் வடவள்ளி பகுதியில் திருடப்பட்ட சொத்துக்களை அந்நபரிடமிருந்து மீட்டு கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.














