சங்கரன்கோவிலில் இன்று ஆடித்தபசு திருவிழா

0
485

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி இன்று(13ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி மதியம் கோமதிஅம்பாள் தங்க சப்பரத்தில் கோயிலில் இருந்து புறப்பட்டு ரதவீதி தபசு மண்டபத்தில் எழுந்தருளுகிறார். மாலை சுவாமி ரிஷப வாகனத்தில் கோயிலில் இருந்து எழுந்தருளி மண்டபத்தில் தவமிருக்கும் கோமதி அம்பாளுக்கு சங்கர நாராயணராக இறைவன் காட்சி கொடுக்கிறார்.

தொடர்ந்து மீண்டும் தபசு மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், இரவு சுவாமி சங்கரலிங்கமாக யானை வாகனத்தில் வந்து கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. பின்னர் சுவாமி, அம்பாளை கோயிலுக்கு அழைத்து செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள், சங்கரன்கோவிலில் குவிந்து வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here