குத்துச்சண்டை வெல்டர்வெயிட் பிரிவு காலிறுதிப் போட்டியை வென்று பதக்கத்தை உறுதி செய்தார் லவ்லினா போர்காய்ன்.
காலிறுதி போட்டியில் தைவான் நாட்டை சேர்ந்த சென் நியன் சின்னிடம் மோதிய லவ்லினா போர்காய்ன் 30-27, 29-28, 28-29, 30-27, 30-27 என்ற புள்ளிகளின் அடிப்படையில் 4-1 என்று வெற்றிபெற்றார்
பதக்கம் வெல்லுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நபர்களில் லவ்லினா போர்காய்ன்னும் ஒருவர். அரையிறுதிக்குள் நுழைந்தாலே பதக்கம் உறுதி என்பது குறிப்பிடத்தக்கது!














