அப்பார்ட்மெண்ட் 6ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்த டாக்டர் பலி

0
1069

கோவை உப்பிலிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் சுப்பையா என்பவரின் மகன் டாக்டர் ராம்குமார். இவரது மனைவி வத்சலாதேவி (56). இவர் கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து கடந்த 2017 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

இவர் கடந்த சில ஆண்டுகளாக வலிப்பு நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார் .இந்நிலையில் நேற்று மாலை குடியிருக்கும் அப்பார்ட்மெண்டில் ஆறாவது மாடியில் துணி காய வைத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வத்சலாதேவி தவறி விழுந்தார்.

இதில் வத்சலாதேவி தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .இதுகுறித்து அவரது கணவர் டாக்டர் ராம்குமார் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார் .புகாரின்பரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் .மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here