தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்று முதன்முதலாக காஞ்சிபுரத்திற்க்கு பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்திற்கு ஸ்டாலின் வந்தார். அங்குள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்,காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர்-உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர்,காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம்,காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன்,மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.