தமிழ்நாடு அரசு கொரோனா தொடர்பான பாதுகாப்பு உபகரணங்களுக்கும் மருத்துவ பொருட்களுக்கும் விலை நிர்ணயம் செய்துள்ளது. தற்போது 15 பொருட்களுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சர்ஜிகல் மாஸ்க் 3 ரூபாய்க்கும், அதே மாஸ்க் 3 அடுக்கு இருந்தால் 4 ரூபாய்க்கும் விற்கப்படவேண்டும். சர்ஜிகல் கவுன் 12 ரூபாய்க்கும், ஆக்சிஜன் மாஸ்க் 54 ரூபாய்க்கும், பிபிஇ கிட் 273 ரூபாய்க்கும் விற்கப்படவேண்டும். 200 மில்லி சானிடைசரை ரூ.110க்கு விற்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.















