கோவை சுக்கிரவார் பேட்டை தங்க நகை பட்டறையில் வேலை பார்த்துவந்த வங்க தேச வாலிபர் பாரூக் கௌசீர் பாகிஸ்தான் வாட்ஸ் அப் குழுவினரோடு தொடர்பில் இருந்ததை போலீசார் கண்காணித்தனர்.
இதையடுத்து அவர் தங்கியிருந்த இடத்தை சோதனை செய்தனர். அப்போது அவரிடம் இந்திய அடையாள அட்டை, ரேஷன் கார்டு இருந்தன. அவர் பாகிஸ்தானியரோடு தொடர்பு கொண்டிருந்ததும், துப்பாக்கி போன்ற ஆயுதம் தொடர்பாக அவர்களிடம் விவாதித்ததும் தெரிய வந்துள்ளதாக போலீசார் கூறுகின்றன. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.














