நெல்லை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் மற்றும் அதிகாரிகள் கூடங்குளம், வள்ளியூர், நெல்லை கொரோனா பரிசோதனை மையம் மற்றும் தடுப்பூசி முகாம்களை ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுடன் காணொலி காட்சி மூலம் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்
‘கொரோனா 3ஆவது அலை வந்தால் அந்த நெருக்கடியை குறைக்கும் வகையில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஏற்கனவே 1600 படுக்கைகள் உள்ள நிலையில், கூடுதலாக 500 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கப்பட உள்ளது. ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுபாட்டு அறையின் மூலம் கண்காணிப்பு பணியும் 1400 நபர்கள் களப்பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது மாநில அளவில் ஆக்சிஜன் என்பது தட்டுப் பாடில்லாமல் தன்னிறைவாக உள்ளது.
கருப்பு பூஞ்சை நோயால் தமிழகத்தில் 256 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நாளை மறு நாள் சென்னையில் மிக சிறந்த மருத்துவ வல்லுனர்கள் உடன் தடுப்பு நடவடிக்கை மற்றும் கட்டுபடுத்துவது தொடர்பாக சுகாதரதுறை சார்பில் ஆலோசனை நடத்த உள்ளோம். கருப்பு புஞ்சை நோயுக்கான தடுப்பு மருந்து மத்திய அரசிடம் இருந்து 600 வயல் பெறப்பட்டுள்ளது, கூடுதல் மருந்தும் கேட்கப்பட்டுள்ளது . மருத்துவர்கள் 2100 பேரும் 6000 செவிலியர்களும் , 3700 தொழில் நுட்ப பணியாளர்களும் புதிதாக விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.
மேலும்ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டம் 2 ஆக பிரிக்கப்பட்ட நிலையில் வள்ளியூரில் தலைமை மருத்துவமனையும், சுகாதர துறை இணை இயக்குனர் அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் . இதுவரை இல்லாத வகையில் முதல்முறையாக தமிழகத்தில் 2.53 லட்சம் பேருக்கு ஒரே நாளில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 75 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திகொண்டுள்ளனர்.

18-44 வயதுடையோருக்கான தடுப்பூசிக்காக தமிழக அரசின் சார்பில் 85 கோடியே 47 லட்சம் ரூபாய் செலுத்தபட்டு 25 லட்சம் டோஸ் தடுப்பூசி பெற்பட்டுள்ளது. பத்தாண்டு காலம் இல்லாத வகையில் மருத்துவர்கள் விரும்பிய இடங்களுக்கு மாறுதல் பெறும் வகையில் வெளிப்படையாக கலந்தாய்வு நடத்தி அவர்களுக்கு இட மாறுதல் அளிக்கப்பட்டு வருகிறது , தமிழக அரசின் நடவடிகைகள் காரணமாக நோய் தொற்று வேகமாக குறைந்துவருகிறது. நோய் தொற்று குறைவதற்கு ஊரடங்கு மிகப்பெரிய காரணமாக உள்ளது. தடுப்பூசி செலுத்துவதற்கு தற்போது மக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
3.5 கோடி தடுப்புசி செலுத்துவதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது.ஜூன் 6 ல் டெண்டர் திறக்கப்படும். 6 மாதங்களில் 3.5 கோடி தடுப்பூசிகள் டெண்டர் கோரப்பட்டபடி தடுப்புசிகள் வரவழைக்கப்படும். 6 மாதத்திற்கு பின்னர் தடுப்பூசி செலுத்திகொள்ளாத நபர்களே தமிழகத்தில் இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்’ என கூறினார் .
கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல்வகாப், ரூபிமனோகரன், நயினார்நாகேந்திரன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் மற்றும் அனைத்துதுறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.