மதுரையை சுற்றி இன்று நடந்தவை

0
913

மதுரையை சுற்றி இன்று நடந்த சம்பவங்களின் தொகுப்பு:

திருப்பரங்குன்றம் ஆர்.வி.பட்டியில் திருநகர் போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்ட போது, பைக் ஒன்றில் போதை மாத்திரைகளை மறைத்து வைத்திருந்த நிலையூர் அழகர் நகரைச் சேர்ந்த தன்னரசு மகன் ஹேமநாதன் என்ற வினோத் ( 25) என்ற வாலிபரை கைது செய்தனர்.

கே.புதூர் ஜவஹர்புரத்தை சேர்ந்தவர் ஆரோக்யம் (60) இவரை இரண்டு தினங்களுக்குமுன்பு அடையாளம்தெரியாதவிஷப்பூச்சி கடித்துவிட்டது. இந்நிலையில் அவர் அரசரடி டி.பி.மெயின்ரோட்டில் சென்றபோது மயங்கிவிழுந்து பலியானார்.


மேலப் பொன்னகரம் எட்டாவதுதெருவைச்சேர்ந்த ராஜேந்திரன் (62) நரம்பு சம்பந்தமான நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்கான சிகிச்சையும் பெற்றுவந்தார். இந்நிலையில் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்டு மயங்கிவிழுந்தார்.அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவர் உயிரிழந்தார்.

.மதுரை மேலமடைமல்லிகை தெருவைச்சேர்ந்தவர் அன்புச்செல்வம் மனைவி அங்கயற்கண்ணி (33) இவர் சில தினங்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


வண்டியூர் சங்கு நகரைச்சேர்ந்தவர் செல்வம் மகன் குப்புராஜா (28) விபத்து ஒன்றில் சிக்கி வலது காலை இழந்துவிட்டார்.கையும் செயல் இழந்துவிட்டது. இதனால் இவருக்கு திருமணமும் ஆகவில்லை.இதன் காரணமாக மனமுடைந்த குப்புராஜா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here