துபையில் இருந்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானத்தில் பெருமளவில் தங்கம் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்கக் கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்ததையத்து பயணிகளை அதிகாரிகள் கண்காணித்தனர்.
அப்போது சந்தேகத்துக்கிடமாக நடந்துவந்த சென்னையை சேர்ந்த முகமது அஸ்ரப் (21) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். கால் வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதற்காக காலில் கட்டு போட்டிருப்பதாகவும் கூறினார்.அதை பிரித்து சோதனை செய்தபோது தங்க கட்டிகளை மறைத்து கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதையடுத்து அவரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து ரூ. 89 லட்சத்தி 17 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 800 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தல் தங்கத்தை வாங்க விமான நிலையத்துக்கு வெளியே காத்திருந்த சென்னையை சேர்ந்த முகமது இப்ராகீம்(39) என்பவரையும் கைது செய்தனர்.













