இரண்டாம் உலகப்போரின் முடிவில் இங்கிலந்து விமானப்படை அதிகாரியான வில்லியம் ஹிட்லரின் கழிவறை சாவியை கண்டுபிடித்துள்ளார்.
கடந்த 1945ல் ஹிட்லரின் மாளிகை மேசை டிராயரில் இருந்து, இந்த கழிப்பறை சாவியை எடுத்ததாக அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார். அந்த சாவி 1980க்கு பின் லண்டனில் இருக்கும் அருங்காட்சியகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதை அப்போது வாங்கிய அரும்பொருள் சேகரிப்பாளர் ஏலத்தில் விற்றுள்ளார்.

இங்கிலாந்தின் கெண்ட்டில் நடந்த ஆன்லைன் ஏலத்தில் இதை வாங்க பெரும்போட்டி நிலவியுள்ளது. இறுதியாக அதை 14,000 பவுண்டுக்கு வாங்கியுள்ளனர்.