மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்குட்பட்ட நிலையூர் பகுதிக்கு செல்லும் சாலையில் பாணாங்குளம் கண்மாயில் சடலம் ஒன்று மிதப்பதாக திருப்பரங்குன்றம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த திருப்பரங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் சுந்தரி தலைமையிலான போலீஸார் கிராமமக்கள் உதவியுடன் அழுகிய நிலையில் இருந்த சடலத்தை மீட்டனர்.
மீட்கப்பட்ட உடலானது 45 வயது மதிக்கதக்க நபராக இருக்க கூடும் எனவும், மூன்று நாட்களுக்கு மேல் நீரில் மூழ்கி இருக்க வாய்ப்பிருப்பாதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இறந்தவர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து, போலீஸார்
தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இறப்பிற்கு காரணம் கொலையா, அல்லது கண்மாயில் குளித்து சென்றபோது தவறி உள்ளே சென்றார் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.















