முன். அமைசர் அன்பழகன் வீடு, நிறுவனங்களில் ரெய்டு

0
958

முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்ப்ழகனுக்கும் நெருங்கிய உறவினர்களுக்கும் சொந்தமான 55 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்துகின்றனர். அவர் மீதும், மனைவி, மகன்கள், மருமக்கள் மீதும் 2016 – 2021 வரை வருமானத்துக்கு அதிகமாக ரூ.11.32 கோடி சேர்த்ததாக வழக்கு உள்ளது.

அவரது மருமகனுக்கு சொந்தமான நுங்கம்பாக்கம் வீட்டில் முன்னாள் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வசித்து வருவதால் அந்த வீட்டிலும் சோதனை நடந்தது. இது தவிர, நீலாங்கரையில் உள்ள சிவகுமார் வீடு, கோபாலபுரத்தில் உள்ள நிறுவனத்திலும் ரெய்டு நடக்கிறது.

இது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நடக்கும் ரெய்டு என்று முன்னாள் முதல்வர் இடைப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here