கடந்த சில தினங்களாக தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியதையடுத்து அரப்படி தேவன் பட்டி வைகை அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் விளை நிலங்களில் நீர் புகுந்தது.
இதனால் வைகை அணையின் நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய மூல வைகை ஆறு, முல்லைப் பெரியாறு, கொட்டக்குடி ஆறு உள்ளிட்ட பகுதிகளில் நீர்வரத்து காரணமாக அணைக்கு நீர்வரத்து வரத்தொடங்கியது. இதனால் அணையின் நீர்மட்டம் 67 அடியாக உயர்ந்தது. அணையின் மொத்த உயரம் 71 அடியாகும்.

தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் தேனி அருகே வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான அரப்படிதேவன் பட்டி பகுதியில் பல ஏக்கர் விளைநிலங்களில் நீர் புகுந்தது, இதனால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.














