மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி பேரூராட்சியில் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர் பி உதயகுமார் நிர்வாக அதிகாரியிடம் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறியதாவது:
அரசின் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்ததால் தினசரி 35,000 பாதிப்பு தற்போது படிப்படியாக மக்களின் ஒத்துழைப்போடு மேற்கொண்ட ஊரடங்கு நடவடிக்கையால் குறைந்து வருவது நமக்கு சற்று ஆறுதல் அளிப்பதாக இருந்தாலும்,இரண்டாவது அலையின் போது ஏற்பட்ட தொற்று பரவலை கட்டுபடுத்த தேவையான மருந்துவ கட்டுமானத்தை உருவாக்க அரசு தடுமாறியது,
தென் மாவட்டங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளது மக்கள் கோரிக்கை வைக்கின்றனர் இதனை நடவடிக்கை எடுக்க அரசிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். .
கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் விதமாக நியாய விலை கடையில் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு வீட்டிற்கே கொண்டுவந்து வழங்குவதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.















