கோவை செட்டிவீதி அருகே உள்ள உப்புக்கார வீதியை சேர்ந்தவர் விஜயகுமார்(38). நகை பட்டறை தொழிலாளி. இவருடைய மனைவி புண்ணியவதி(32). இவருக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் கர்ப்பமானார். 4ஆவது குழந்தை என்பதால் மனவருத்தத்துடன் இருந்ததாக தெரிகிறது.
நிறைமாத கர்ப்பிணியான அவர், வீட்டில்
தனக்குத்தானே பிரசவம் பார்த்தார். அவருக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. தொப்புள்கொடி சரியாக அறுபடவில்லை. பிரசவமும் சரியாக
இல்லாததால் குழந்தையும், தாயும் மயங்கினர். 2 பேரையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சரியாக பிரசவம் பார்க்காததால் குழந்தை இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பெரியகடை வீதி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி விசாரணை நடத்தினார். புண்ணியவதி மீது இந்திய தண்டனை சட்டம் 315-( குழந்தை செத்துப்பிறக்க வேண்டும் அல்லது பிறந்த உடன் சாக வேண்டும் என்று செயல்படுவது) என்ற பிரிவின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.













