தெருவில் சென்ற சிறுமியை ஆட்டோவில் கடத்தி பாலியல் தொந்தரவு செய்த முதியவருக்கு தர்ம அடி

0
420

சென்னை அமைந்தகரையில் நேற்று 9 வயது சிறுமி வீட்டிற்கு மாவு வாங்கிக்கொண்டு சாலையில் நடந்து செல்லும் போது அந்த வழியாக ஆட்டோவில் வந்த சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த முதியவர் முரளிதரன்(56) சிறுமியை ஆட்டோவில் கடத்தி சென்று கோயம்பேடு பகுதியில் உள்ள இருட்டு பகுதியில் உள்ள முட்புதரில் வைத்து சிறுமியிடம் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

பயந்து போன சிறுமி முதியவரை தள்ளிவிட்டு அங்கு இருந்து தப்பித்து ஒடி வருவதை பார்த்த பொது மக்கள் சிறுமியை மடக்கி கேட்ட போது அப்போது சிறுமி நடந்ததை அழுதுகொண்டு கூறியதை அடுத்து ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற முதியவரை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கி கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணை செய்த கோயம்பேடு போலீசார் சிறுமியை ஆட்டோவில் கடத்தியது அமைந்தகரை என்பதால் அமைந்தகரை காவல் நிலைத்தில் முதியவரை ஒப்படைத்தனர். அமைந்தகரை போலீசார் சிறுமி வழக்கு என்பதால் இந்த வழக்கை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முதியவரை ஒப்படைத்தனர்.

அதன் பின்னர் ஆய்வாளர் சாந்தி தேவி சிறுமியிடம் விசாரணை செய்த போது தாத்தா என்னிடம் தவறாக நடந்து கொண்டார் என கதறினார். பின்னர் சிறுமியிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த முரளிதரன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட முரளிதரன் மீது 20I9 ஆண்டில் மாதவரம் பகுதியில் அங்கு உள்ள சிறுமியிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த போக்சோ வழக்கில் சிறைக்கு சென்று வந்தவர் என்பது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here