பாகிஸ்தானில் கராச்சியிலிருந்து ராவல்பிண்டி புறப்பட்ட தேஜ்காம் ரயில் லியாகத்பூர் அருகே சென்றபோது ஒரு பெட்டியிலிருந்து தீவந்தது. உடனடியகா ரயில் நிறுத்தப்பட்டது என்றாலும் மற்ற பெட்டிகளுக்கும் தீ வேகமாக பரவியது.
இதில் பெட்டியிலிருந்து ஏராளமானோர் குதித்து தப்பினர். நெருக்கடியான சூழலில் பலர் பலியாயினர். பலியானோர் எண்ணிக்கை தற்போது 65ஆக உயர்ந்துள்ளது. பயணி ஒருவர் சமையல் சிலிண்டரை கொண்டுசென்றதால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.











