மதுரையில் கழிவு நீரோடு தெருவில் கலந்த மழைநீர்

0
814

மதுரை நகரில் ஐந்தாவது நாளாக மழை தொடர்ந்து பெய்து வருவதால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தது.
மதுரையில், தல்லாகுளம், கோரிப்பாளையம், கே.கே.நகர், புதூர், மாட்டுத்தாவணி, அண்ணாநகர், மேலமடை, வண்டியூர், கருப்பாயூரணி உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
தொடர் மழையால் சில இடங்களில் கழிவு நீரானது சாலையில் பெருக்கெடுத்து ஓடும் நீருடன் கலந்தது.


மதுரை மேலமடை வீரவாஞ்சி தெரு, மருதுபாண்டியர் தெருவில் மழைநீர் பெருக்கெடுத்து சாலையில் கழிவு நீர் வாய்க்காலிருந்து வெளியேறும் நீருடன் கலந்து சாலையில் ஓடியது.
இதனால் இப்பகுதிகளில் இரவு நேரங்களில் கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளது.
மதுரை மாநகராட்சி அதிகாரிகள் சாலையில் பெருக்கெடுக்கும் கழிவு நீரை அகற்ற முன் வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here