உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை சரிவு

0
1716

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், 2018-19 ஆம் ஆண்டுக்கான உயர்கல்வி நிலவரம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. 310 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையில், கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளில், மாணவர் சேர்க்கை விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் கணிசமாக சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014-15 ஆண்டில் பி.இ., பி.டெக்., படிப்புகளில் 42 லட்சத்து 54 ஆயிரத்து 919 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்த எண்ணிக்கை, கடந்த 2018-19 ஆம் கல்வியாண்டில் 37 லட்சத்து 70 ஆயிரத்து 949 ஆக குறைந்துள்ளது.

கலை, அறிவியல் கல்லூரிகளில், இதே கால கட்டங்களில், 98 லட்சத்து 69 ஆயிரத்து 520 ஆக இருந்த மாணவர்கள் சேர்க்கை, 91 லட்சத்து 98 ஆயிரத்து 205 ஆக குறைந்துள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் 71.1 சதவீதமாகவும் ஆகவும், மாணவிகளின் சேர்க்கை 28.9 சதவீதமாகவும் உள்ளது. முதுகலை பட்டப்படிப்பிற்குப் பின் 9.4 சதவீத மாணவர்கள் மட்டுமே ஆய்வு படிப்பிற்கு செல்கின்றனர்.

தற்போதைய ஆய்வறிக்கையின் படி, தேசிய அளவில் உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் அளவு 26.3 சதவீதமாக உள்ளது. இவர்கள் அனைவரும் 18 முதல் 23 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்கின்றனர். குறிப்பாக உத்தரபிரதேசம், கர்நாடகா மாநிலங்களில் மாணவிகள் அதிகளவில் உயர்கல்விக்கு செல்வதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சரிவுக்கு முக்கிய காரணம் பாடத்திட்டத்தின் கடினத்தன்மை, உயர்கல்வி கல்வி செலவு மிகுந்ததாக ஆனது போன்றவையே. இவ்வாறிருக்க, பள்ளிப்பருவத்திலேயே நுழைவுத்தேர்வு, கலைக்கல்லூரிகளில் கவுன்சலிங் என்பன போன்ற அம்சங்களை கொண்டுள்ள புதிய கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்தும்போது சேர்க்கை விகிதம் மேலும் கீழே செல்லும் என கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here