மும்பை அரே குடியிருப்பு பகுதியில் நின்று நிழல் தரும் பல்லாண்டு முற்றிய மரங்களை வெட்டி வாகன நிறுத்தம் அமைக்க மாநகராட்சி முடிவுசெய்தது.
இதை அப்பகுதி மக்கள் தடுத்தனர். அவர்களுக்கு ஆதரவாக நடிக, நடிகையர் களமிறங்கினர். இன்று அப்பகுதி மக்களை சந்தித்து ஆதரவு அளிக்க காங்கிரசிலிருந்து சிவசேனாவுக்கு மாறிய பிரியங்கா திரிவேதி சென்றார்.
அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களுடன் பிரியங்கா கடுமையான வாக்குவாதம் செய்தார். ஆனாலும் போலீசார் உறுதியாக நின்று அவரை திருப்பி அனுப்பினர்.












