எண்ணெய் கப்பலுடன் சிறைபிடிக்கப்பட்ட இந்தியர்கள் விடுதலை

0
708

ஈரான் நாட்டின் எண்ணெய் கப்பல் கடந்த மாதம் இங்கிலாந்து கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியமான ஜிப்ரால்டர் கடல் பகுதியில் சென்ற போது, ஜிப்ரால்டர் போலீசார் அந்த கப்பலை தடுத்து நிறுத்தி ஐரோப்பிய கூட்டமைப்பின் பொருளாதார தடையை மீறி, சிரியா நாட்டுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுவதாக கூறி, அந்த கப்பலை சிறை பிடித்தனர்.

கப்பலில், மொத்தம் 28 பேர் இருந்தனர். அனைவரையும் கப்பலிலேயே சிறை வைத்தனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவர். கேப்டன், தலைமை அதிகாரி, 2 ஊழியர்கள் என 4 இந்தியர்களை போலீசார் கைது செய்தனர்

இதற்கிடையே, இங்கிலாந்து அரசை தொடர்பு கொண்ட ஈரான், தங்கள் கப்பலை விடுவிக்காவிட்டால், கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்ததுடன் பதிலடியாக, வளைகுடா பகுதியில் இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான் சிறைபிடித்தது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 4 இந்திய ஊழியர்கள் மீதான போலீஸ் நடவடிக்கை முடிவடைந்து. அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here