விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில், ரயில் மூலமாக வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக இருக்கன்குடி போலீசாருக்கு
கிடைத்த தகவலின் பேரில் இருக்கன்குடி சாலையில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகப்படும் வகையில், பைகளுடன் சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து சோதனை செய்ததில் அவர்கள் வைத்திருந்த பையில் 90 வெளிமாநில மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பிடிபட்ட இருவரும் நத்தத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகன் (30), பால்பாண்டி (25) என்பதும், இவர்கள் இருவரும் வெளிமாநில மது பாட்டில்களை ரயில் மூலமாக கடத்திக்கொண்டு வந்து, கூடுதல் விலைக்கு விற்று வந்தது தெரிந்தது. இருவரையும் கைது செய்து மது புட்டிகளை போலீசார் கைப்பற்றினர்.










