மதுரை விமான நிலையத்தில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் செய்தியாளர்களை சந்தித்தார்.
கொரோனா மூன்றாம் அலை முன்னேற்பாடுகள் குறித்து கேட்ட கேள்விக்கு:
மூன்றாம் அலை வந்தால் அதற்கான முன்னேற்பாடுகள் இப்பொழுது தயாராக உள்ளது மூன்றாம் அலை குழந்தைகளுக்கு வரும் என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். எனவே , இப்போது உள்ள குழந்தைகள் மருத்துவமனையை மையப்படுத்தி அதில் அவர்களுக்கான தனியாக ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கை வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்தி உள்ளது. மூன்றாம் அலை வரக் கூடாது அப்படி வந்தால் அதனை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது என்றார்.
வருவாய் துறையில் புதிய நடவடிக்கைகள் என்னென்ன என்ற கேள்விக்கு,
வருவாய் துறை என்பது பொது மக்களோடு அன்றாட வாழ்வில் இணைந்து செயல்படும் துறை. இந்த துறையின் மூலம் பொது மக்களுக்கு நலன் ஏற்படுத்தி தரப்படுகிறது. உதாரணமாக, முதியோர் பென்சன் போன்றவை செயல்படுகிறது இதனை துரிதமாக இணைய வழியில் எந்த ஒரு புரோக்கர்களும் இன்றி அதிகாரிகளையே நேரடியாக சந்தித்து தொடர்பு கொள்ளும் வேலையை நவீனப் படுத்தி வருகிறது என்றார்.