நெல்லை அரசு மருத்துவமனையில் குழந்தைகளை தூக்கிய பெண்ணிடம் விசாரணை

0
1177


நெல்லை அரசு மருத்துவமனை எப்போது பரபரப்பாக இயங்கும் தென்மாவட்டங்களின் பெரிய மருத்துவமனையாகும் . இங்கு உள்நோயாளிகளாக மட்டும் 1500 க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர் . தினமும் புறநோயாளிகளாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர் .

மருத்துவமனை வளாகத்தில் மேற்கு பாகத்தில் பிரசவ மற்றும் குழந்தைகள் வார்டு இயங்குகிறது. இதற்கு பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உள்நோயாளிகளின் உதவியாளர்கள் மட்டுமே வார்டுக்குள் செல்ல முடியும் .

இந்நிலையல் குழந்தைகள் வார்டு மேல்தளத்தில் பிறந்த குழந்தைகள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் பெண் ஒருவர் மர்மமாக சுற்றித்திரிந்ததுடன் அங்குள்ள குழந்தைகளையும்கையில் எடுத்துள்ளார் . வார்டில் இருந்தவர்கள் விசாரித்ததற்கு முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் அவரைப் பிடித்து வார்டு பாதுகாவலரிடம்ஒப்படைத்தனர் .

இதனையடுத்து போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர். அதில், அவர் மேலப்பாளையத்தைச் சேர்ந்த சகிலா என்பதும், கணவர் இறந்து 10 ஆண்டுகள் ஆகியதாகவும் தெரியவந்தது. குழந்தைகள் மீது கொண்ட அதீத ஆர்வம் காரணமாக மருத்துவமனையில் குழந்தைகளை பார்க்கவந்ததாக அவர் தெரிவித்தார். இதில் திருப்தியடையாத போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று குழந்தைகளை கடத்த வந்தவரா, குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here