ரேஷன் டோக்கனை விநியோகித்த திமுக பிரமுகர்: கூட்டம், கொந்தளிப்பு

0
1154

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள பெருமாள் மலையில் ரேஷன் கடை மூலம் வழங்கப்படும் 13 பொருட்கள் தொகுப்புக்கான டோக்கனை திமுக பிரமுகர் ஒருவர் தன் வீட்டில் வைத்து விநியோகித்தார்.

டோக்கனை வாங்க திரண்ட மக்களால் அந்த இடத்தில் பெரும் நெருக்கடி ஏற்பட்டது, தள்ளு முள்ளு நடந்ததை அறிந்த போலீசார் அங்கு வந்து கூட்டத்தை கட்டுப்படுத்தி விரட்டியடித்தனர்.

ரேஷன் கடை ஊழியர் மூலம் டோக்கன் விநியோகிக்கப்பட வேண்டும், சட்ட விரோதமாக டோக்கன் வழங்கிய திமுஅக் பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here