தூத்துக்குடி மாநகராட்சியில் நான்காம் கேட் முதல் சின்னகண்ணுபுரம் வரையுள்ள நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெறுகிறது.சாலையின் ஒருபக்கம் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. மேலே மின் கம்பி செல்கிறது.
உயர் மின்னழுத்த கம்பி என்பதால் மரம் வளரும் நிலையில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. குடிநீர் குழாய் செல்லும் பாதையில் மரம் நடப்படுவதால் அடிக்கடி வேரோடு உருவி பராமரிப்பு வேலைக்கு வழி வகுத்து விடவும் வாய்ப்புள்ளது.

மேலும், எதிர்காலத்தில் சாலையை விரிவாக்கம் செய்யும் பணி நடை பெற்றால் நட்ட மரங்கள் அனைத்தையும் அகற்றும் சூழ்நிலை கூட நேரிடலாம்.
.ஆகவே, ‘எண்ணித் துணிக கருமம் ‘என்கின்றார்கள் அப்பகுதி மக்கள் .









