வாணியம்பாடி வனப்பகுதியில் 1200 லிட்டர் கள்ளச்சாராயம் அழிப்பு

0
433

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லைப்பகுதியான மாதகடப்பா பாரதி நகர் வனப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தலைமையிலான 23 காவலர்கள் அடங்கிய ஒரு குழுவும் , வாணியம்பாடி மது விலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் தமிழரசி தலைமையிலான மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் மற்றொரு குழுவாக தனித்தனியாக மாதகடப்பா மலைப்பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் ட்ரோன் கேமரா மேலே பறக்குவதை கண்ட சாராயம் காய்ச்சும் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனை தொடர்ந்து பாரதி நகர் மலைப்பகுதியில் சாராய காய்ச்சுவதற்காக 30 பிளாஸ்டிக் கேன்களில் வைத்திருந்த 2100 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் மற்றும் 5 கேன்களில் இருந்த 270 லிட்டர் கள்ள சாராயம் கீழே ஊற்றி அழித்தனர். மேலும் கள்ளச்சாராயம் காய்ச்ச மண்ணில் புதைக்கப்பட்டிருந்த அடுப்புகளை உடைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக தப்பியோடிய பாரதி நகர் பகுதியை சேர்ந்த குமார் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் தேடி வருகின்றனர்.

இதே போல் மற்றோர் குழு மாதகடப்பா மலை தாமரை ஏரி பகுதியில் நேரடியாக எஸ்.பி சிபி சக்ரவர்த்தி தலைமையில் மது விலக்கு போலீஸார் டிரோன் கேமரா மூலம் சோதனை நடத்தினர். அப்போது கள்ளச்சாராயம் காய்ச்சுவது கண்டறியப்பட்டு சுமார் 2 ஆயிரம் கள்ளச்சாராயஊறல்கள், கேன்களில் இருந்த சுமார் ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் , அடுப்புகள் ஆகியவற்றை அழித்தனர். மேலும் கள்ளச்சாராயம் எடுத்துச்செல்ல பயன்படுத்திவந்த 7 கழுதைகள் பறிமுதல் தப்பி ஒடியவர்களை தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here