சென்னை பம்மல் அடுத்த அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் லாரி ஓட்டுனர் தேவேந்திரன் (40) இன்று வீட்டில் தனது பிறந்தநாளை கொண்டாடிகொண்டிருந்த போது வெளியே சிலர் கேலி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது .

இதனால் ஆத்திரம் அடைந்த தேவேந்திரன் வெளியே சென்று பார்த்த போது வேன் ஓட்டுனரான மோகன்ராஜ்(36) தனது சகோதரர்கள் பிரபு ,மோகலிங்கம் அளவுக்கு அதிகமாக மது போதையில் இருந்துள்ளனர் இதனால் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்கு வாதத்தில் மோகன்ராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக தேவேந்திரனை குத்திவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிசென்றுள்ளனர் .தகவல் அறிந்து வந்த போலிசார் தேவேந்திரனை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு சிகிச்சை அளிக்கபட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்தார்

மேலும் முட்புதரில் ஒளிந்து கொண்டிருந்த மோகன்ராஜ் மற்றும் சகோதரர்களை மடக்கி பிடித்து கைது செய்த போலிசார் விசாரித்த்தில் வீட்டின் அருகே வாகனத்தை நிறுத்துவது குறித்து ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளதாக ஒப்புகொண்டனர் இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலிசார் அவர்களை சிறையில் அடைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.













