தமிழ்நாடு முழுவதும் நடந்த கொரோனா தடுப்பூசி மெகா முகம் ஓரளவு சரியாக ஒழுங்கமைக்கப்பட்டும், பல இடங்களில் குளறுபடிகள் நடந்துள்ளன.
நெல்லை மாவட்டம் மணப்படை வீடு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிக்கான அட்டை வழங்கப்படும் பெரும்பாலோருக்கு ஊசி போடப்படவில்லை. இதனால் அவர்கள் முகாமுக்கு வந்து வருத்தத்துடன் திரும்பினர் என ஏமாற்றமடைந்த மாற்றுத்திறனாளி முருகன் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோமாநேரி ஊராட்சி கலுங்குவிளை சி.எம்.எஸ் இவாஞ்சலிக்கல் உயர்நிலைப்பள்ளியில் 147 பேருக்கு கொரணா தடுப்பூசி போடப்பட்டுள்ளது .
ஆனால், ‘ தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை வழங்கப்படமாட்டாது. ரேசன் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படமாட்டாது.முதியவர்களுக்கான உதவி தொகை வழங்கப்படமாட்டாது.விதவை தாய்மார்களுக்கான ஊக்கத்தொகை வழங்கப்படமாட்டாது’ என்றெல்லாம் கூறி ஆட்கள் அழைத்து வரப்பட்டதாக மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம் பொறுப்பாளர் இசக்கிமுத்து தெரிவித்துள்ளார்.

மேலும், ஊசி போட்ட பின் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள் வழங்கப்படவில்லை.
மாத்திரைகள் வழங்கவில்லை.இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சோதிக்கப்படாமல் ஊசி போடப்பட்டுள்ளது. மருத்துவ ஆலோசனை வழங்கவில்லை.
மருத்துவரின்றி கொரணா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அங்கு மட்டுமல்ல, பல முகாம்களில் மருத்துவ பரிசோதனையும் ஊசி போட்ட பின்பு பராமரிப்பும் சரியாக செய்யப்படவில்லை என்றும், நிறைய இடங்களுக்கு புதிய தடுப்பூசி மருந்து கிடைக்கவில்லை என்றும் குறைகூறப்பட்டுள்ளது.
அரசு கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட நினைப்பது சரி.ஆனாலும் தடுப்பூசியின் வீரியம் கருதி, சரியான வழிகாட்டும் நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.













