அரக்கோணத்தில் ஊரடங்கை மீறிய வணிக நிறுவனங்களுக்கு சீல்

0
1214

அரக்கோணம் நகரில் ஊரடங்கை மீறி சில வணிக நிறுவனங்கள் செயல்படுவதாக வட்டாட்சியர் பழனிராஜனுக்கு தகவல் வந்தது. அதனையடுத்து சுவால்பேட்டை காந்தி ரோட்டில் உள்ள கிருஷ்ணா பல்பொருள் அங்காடியில் சோதனை நடத்தியபோது அதில் பொதுமக்கள் பொருட்களை வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் அதே பகுதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வர துணிக்கடையில் சோதனை நடத்தியபோது உள்ளே பொதுமக்கள் துணிகளை வாங்கியதையடுத்து இரண்டு கடைகளையும் பூட்டி சீல் வைத்த வருவாய் துறையினர் இரு கடைகளுக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.20 ஆயிரம் அபாரதம் வசூல் செய்தனர்கள். தமிழக அரசின் விதிகளை மீறி தொடர்ந்து கடைகளை திறந்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here