தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 7ஆவது தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவர் அந்தப்பகுதியில் ராஜமுருகன் என்பவர் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
நேற்று இரவு இவர் குடும்பத்துடன் வீட்டில் படுத்திருந்தபோது சமீபத்தில் சிமெண்ட் பூச்சு பூசப்பட்ட மேற்கூரை இடிந்துவிழுந்தது. இதில் நடராஜனின் மகளும் பொறியியல் பட்டதாரியுமான பரமேஸ்வரி (23), கல்லூரியில் படித்துவரும் மகன் சுந்தர் ஆகியோர் உடல் நசுங்கி துடித்தனர்.
இருவரையும் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர், வழியிலேயே பரமேஸ்வரி இறந்தார். சுந்தருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.








