பைக், செல்போன் திருட முயன்ற 4 வாலிபர்கள் கையும் களவுமாக பிடிபட்டனர்

0
1010


பொள்ளாச்சி ஊத்துக்குளி ரோடு ஆர்கே நகர் பகுதியை சேர்ந்த தண்டபாணி என்பவரின் மகன் கார்த்திக் குமார் என்கிற கார்த்தி( 26) .மெக்கானிக் ஆன இவர் நேற்று காலை கோட்டூர் ரோடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே தனது பைக்கை நிறுத்தி வட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்க சென்றார்.


மீண்டும் அவர் திரும்பி வந்த பொழுது இரண்டு வாலிபர்கள் அவரது பைக்கை திருடி செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து நாகமணி அருகில் உள்ளவர்கள் உதவியுடன் பைக்கை திருடி செல்ல முயன்ற இருவரை பிடித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபர்கள் பொள்ளாச்சி நேரு நகர் பகுதியைச் சேர்ந்த ராஜன் என்பவரின் மகன் நாகமணி (19) மற்றும் கோட்டூர் ரோடு நேரு நகர் பகுதியைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் என்பவரின் மகன் சதாம் உசேன் (20) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பொள்ளாச்சி பல்லடம் ரோடு பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் ஜெயபிரகாஷ்( 32). பெயிண்டர் ஆன இவர் நேற்று காலை பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனை இரண்டு வாலிபர்கள் எடுத்துக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றனர். ஜெயபிரகாஷ் சத்தம் போடவே செல்போனை பறித்து கொண்டு தப்பி செல்ல முயன்ற இருவரை பொதுமக்கள் துரத்திப் பிடித்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபர்கள் கோட்டூர் ரோடு நேரு நகர் பகுதியைச் சேர்ந்த ஜபருல்லா என்பவரின் மகன் ஷேக் பரீத்( 21) மற்றும் கோவை செல்வபுரம் இப்பகுதியை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் அஜித்(21) என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here