சேர்ந்து வாழ மறுத்த மனைவியின் வேன்களை கொளுத்திய கணவர்

0
417


கோவை
பீளமேடு காந்திமா நகர் அடுத்த ஸ்ரீராம் நகர் பகுதியைச் சேர்ந்த அரியப்பன் என்பவரின் மகள் தேவிப்பிரியா (35 ).இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் இறந்தார். இதையடுத்து கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு முகமது ரபிக் என்கிற பாபு என்பவரை தேவி பிரியா திருமணம் செய்தார். தேவிபிரயா காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் தேவிப்பிரியாவிற்கும் அவரது கணவர் பாபு விற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து தேவிப்பிரியா அவரது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில்
நேற்று இரவு தேவிபிரியாவின் வீட்டிற்கு வந்த பாபு தன்னுடன் வந்து விடுமாறு கேட்டு உள்ளார். அதற்கு தேவிப்பிரியா மறுத்துள்ளார். இதையடுத்து தன்னுடன் சேர்ந்து வாழ விட்டால் உன்னை உயிரோடு விடமாட்டேன் என்று பாபு தேவிப்ரியாவை மிரட்டியுள்ளார். ஆனால் தேவி பிரியா கணவர் பாபு உடன் செல்ல சம்மதிக்கவில்லை .இதை அடுத்து தேவிபிரியாவின் வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காய்கறி கொண்டு செல்வதற்கான இரண்டு வேன்களை பெட்ரோல் பெட்ரோல் ஊற்றி பாபு கொளுத்தினார். இதில் இரண்டு வேன்களும் எரிந்தது. பின்னர் தீயை அணைத்துவிட்டு தேவிப்ரியா இதுகுறித்து பீளமேடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here