கோனியம்மன் கோயில் திறக்கக் கோரி பெண்மணி ஒருவர் சாணி பவுடர் கரைத்துக் குடித்து தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை பொதுமக்களிடம் தங்களுடைய கோரிக்கை மனுக்களை பெறக்கூடிய நாளான இன்று பலதரப்பட்ட மக்கள் தங்களுடைய கோரிக்கை மனுக்கள் ஆக ஆட்சியரிடம் மனு அளிக்க வருவார்கள்.
மதியம் ஒரு மணி அளவில் திடீரென ஒரு பெண்மணி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் புகுந்து கோவை கோனியம்மன் கோவிலை திறக்கக்கோரி சாணி பவுடர் கரைத்துக் குடித்து தர்ணாவில் ஈடுபட்டார். தற்கொலைக்கு முயன்ற அப்பெண்ணின் பெயர் முத்துலட்சுமி என்பதும் அவர் பூ மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் என்பதும்,மாகாளியம்மன் தெருவில் வசிப்பவர் வசிப்பதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த போலீசார் உடனடியாக அந்தப் பெண்மணியை தடுத்து நிறுத்தி அழைத்துச் சென்றனர்.
இதனால் சிறிது நேரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.















